முகப்பு

 

அறிமுகம்
மனித வாழ்விற்கு இன்றியமையாதன உணவு, உடை, இருப்பிடம் ஆகும். எனினும் மனிதனை உயிர்த்தன்மையோடு வைத்துக்கொள்வது அவன் உலகத்தோடு ஏற்படுத்திக்கொள்ளும் தொடர்பில் தான். இயல், இசை, நாடகம், சுற்றுச்சூழல், வரலாறு, கலை, இலக்கியம் போன்றவற்றில் ஏற்படும் ஆர்வம் தேடலாக மாறி சமூகமாற்றத்திற்கு வித்திடுகிறது. தொல்லியல், வரலாறு, கலை ஆர்வத்தையும் அதைப்பற்றிய தேடலையும் பொதுமக்களிடமும், இளைஞர்களிடமும், மாணவர்களிடமும் கொண்டு சேர்க்கும் முயற்சிக்காக வரலாற்று ஆர்வலர்களைக்கொண்டு 2017 ஆம் ஆண்டு மே திங்கள் 7 ஆம் திருவண்ணாமலை இவ்வமைப்பு ஏற்படுத்தப்பட்டது. இவ்வமைப்பில் வரலாற்று ஆய்வாளர்கள், அரசு அலுவலர்கள், கல்வியியலாலர்கள், ஆர்வலர்கள் என பலதரப்பட்ட ஆளுமைகள் இணைந்துள்ளார்கள். 
        திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவம் என்ற இவ்வமைப்பு இம்மாவட்டத்தைப் பற்றி கலை, வரலாறு, பண்பாடு தொல்லியல்  ஆய்வுகளில் ஈடுபட்டு, அவற்றைப்பற்றிய விழிப்புணர்வையும், தேடல் ஆர்வத்தையும் ஊக்குவிப்பது இதன் முக்கியப்பணிகளில் ஒன்று. இவை தவிர கருத்தரங்குகள், கலந்துரையாடல்கள், சிறப்பு சொற்பொழிவுகள் மூலம் தமிழக வரலாற்றின் சிறப்புகளை வெளிக்கொண்டு வருகின்றது. இவ்வமைப்பு இதுவரை இம்மாவட்டத்தில் 10 க்கும் மேற்பட்ட புதிய  கல்வெட்டுகளும், 50 க்கும் மேற்பட்ட நடுகற்களையும் புதிய தொல்லியல் தடயங்களையும் கண்டுபிடித்து உள்ளது. இவை அவ்வப்போது நாளிதழ்களிலும், சமூக ஊடகங்களிலும் வெளியிட்டு வருகின்றது. 
       இம்மாவட்டத்தில் அமைந்துள்ள ஜவ்வாதுமலை மக்களின் வரலாறு, வாழ்வியல் ஆகியவற்றை வெளிக்கொணரும் வண்ணம் கடந்த ஆண்டு செப்டம்பர் 3 ஆம் தேதிஜவ்வாதுமலை வாழ்வும் வரலாறும்என்ற ஒரு நாள் மாநில அளவிலான கருத்தங்கம் நடைபெற்றது. இக்கருத்தரங்கில் மானுடவியல் அறிஞர்கள், தொல்லியல் மற்றும் வரலாறு ஆய்வாளர்கள் கலந்துகொண்டனர். இதனையடுத்து இம்மாவட்டத்தில் மக்கள் வழக்கில் உள்ள வழக்காறுகளை, சொற்களை தொகுப்பது பற்றிய வட்டார வழக்கியல்கருத்தரங்கம் 2018 மார்ச் 17 ஆம் தேதி திருவண்ணாமலை கலைக்கல்லூரியில் நடைபெற்றது. இக்கருத்தரங்கில் நடுநாட்டு வட்டார சொல்லகராதி உருவாக்கிய திரு. கண்மணி குணசேகரன் அவர்கள் சிறப்புரை ஆற்றினார். உலக பாரம்பரிய தினமான ஏப்ரல் 18 அன்று கோயில் சிற்பக்கலைபற்றிய சிறப்பு சொற்பொழிவை திரு. சந்திரமூர்த்தி, தொல்லியல் அறிஞர் அவர்கள் நிகழ்த்தினார. தொடர்ந்து தற்போது தஞ்சை தொல்லியல் கழகத்துடன் இணைந்து ஜுலை 21,22 ஆகிய தேதிகளில் 28வது ஆண்டுக்கருத்தரங்கமும் 29 வது ஆவணம் புத்தக வெளியீட்டு விழாவும், கண்காட்சிகளும் நடத்தப்படவுள்ளன. 
       இவ்வமைப்பு எதிர்காலத்தில் இம்மாவட்டத்தில் உள்ள  குடைவரைகள், கோயில்கள், நடுகற்கள், கல்வெட்டுகள், ஊர் வரலாறு, பண்பாட்டு வரலாறு போன்ற பல்வேறு தலைப்புகளில் புத்தகங்களும், ஆவணப்படங்களும் எடுத்து வெளியிட திட்டமிட்டுள்ளது.  இவ்வமைப்பின் செயல்பாடுகளில் யாவரும் இணைந்து இம்மாவட்டத்தின் சிறப்புகளை வெளிக்கொண்டுவரும்  பணியில் இணைய அன்புடன் அழைக்கின்றோம். 
இங்ஙனம்,
திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவம்,

அமைப்பு உறுப்பினர்கள்
. எண்
பதவி
பெயர்
குறிப்பு
1
தலைவர்
டி.எம்.பிரகாஷ்
.பெதங்கவேல்
பத்திரிகையாளர், சமூக ஆர்வலர்,
2
துணைத் தலைவர்கள்
வே.நெடுஞ்செழியன்
.பெவேலாயுதம்
இணைப்பேராசிரியர், அரசு கலைக்கல்லூரி, திருவண்ணாமலை
3

ஸ்தனிஸ்லாஸ்.
/பெராயப்பன்
இணைப்பேராசிரியர் அரசு கலைக்கல்லூரி, திருவண்ணாமலை
4
செயலாளர்
ச. பாலமுருகன் 
.பெசம்பந்தன்
வட்டாட்சியர், திருவண்ணாமலை,
வரலாற்று ஆர்வலர்
5
துணைச் செயலர்கள்
நீதிதாஸ்விஜயராஜ்
.பெகனகசபாபதி
அரசுப்பள்ளி ஆசிரியர், வரலாற்று ஆர்வலர்.
6

பிரேம்குமார்,
.பெசுந்தரமூர்த்தி
பேராசியர், அரசு கலைக்கல்லூரி, திருவண்ணாமலை, 
7



8
பொருளாளர்
கா.மணியரசன்
.பெகாத்தவராயன்
வழக்கறிஞர், வரலாற்று ஆர்வலர்
9
செயற்குழுஉறுப்பினர்கள்
ஆர்.தனராஜ்
.பெராஜாகண்ணு
வணிகர், வரலாற்று ஆர்வலர்
10

சேது த.பெ.சுந்தரம்

புகைப்படக்கலைஞர்., வரலாற்று ஆர்வலர்.
11

ரா.சேகர்
.பெ.ராமசாமி
பணிநிறைவு பெற்ற பேராசிரியர், வரலாற்று ஆய்வாளர்.
12

விஜயன்
.பெஇராமகிருஷ்ணன்
தலைமையாசிரியர், 
வரலாற்று ஆய்வாளர்.
13

விநாயகம்
.பெகதிர்வேல்.
விவசாயி, வரலாற்று ஆர்வலர்.







Comments

Popular posts from this blog