தொல்லியல்
தொல்லியல்
நாட்டின் வரலாற்றுக்கு அடிப்படைச் சான்றாக அமைவன தொல்லியல் ஆய்வுகளும் அவ்வாய்வுகளில் கிடைக்கப்பெறும் பொருட்களும் ஆகும். தமிழகத்தில பல இடங்களில் தொல்லியல் ஆய்வுகள் நடைபெற்றிருக்கின்றன. இதன் மூலம் ஆதி மனிதன் வாழ்ந்த தடயங்கள், அவர்கள் பயன்படுத்திய ஆயுதங்கள், ஆதிமனிதன் வரைந்த ஓவியங்கள் ஆகியவை மனிதன் பரிணாம வளர்ச்சியையும் மானுடவியல் வளர்ச்சியையும் தெரியப்படுத்துகின்றன. தொல்லியல் ஆய்வில் கிடைக்கப்பெறும் பொருட்களைக் கொண்டு அது வரலாற்றுக்கு முற்பட்ட காலம், வரலாற்றுக்காலம் என இரு பெரும் பிரிவாக பிரித்து பகுத்து ஆய்வுசெய்யப்படுகின்றன. தமிழ்நாட்டில் நடைபெற்ற பல்வேறு தொல்லியல் ஆய்வுகள் மூலம் பழந்தமிழரின் வாழ்க்கைமுறை, கலைகள், பண்பாட்டு வளர்ச்சி, மொழிவளர்ச்சி போன்றவற்றைப்பற்றி அறியமுடிகின்றது. பழந்தமிழர்கள் 2500 ஆண்டுகளுக்கு முன்பே எழுத படிக்க தெரிந்த சமூகமாக இருந்தார்கள் என்பதும் இந்தியாவில் தமிழர்களின் பண்பாட்டு தனிச்சிறப்பு பெற்று அமைந்துள்ளது என்றும் இவ்வாய்வுகள் மூலம் அறியலாம்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் தா.மோட்டுர், ஆண்டிப்பட்டி, படவேடு ஆகிய இடங்களில் அகழாய்வு செய்யப்பட்டுள்ளன. இவ்வகழாய்வுகள் மூலம் பல அரிய தொல்லியல் பொருட்கள், தமிழ்பிராமி எழுத்து பொறித்த பானைஓடுகள், சுடுமண் சிலைகள், கற்கருவிகள், சங்க கால நாணயங்கள் ஆகியவை கிடைத்துள்ளன. ஜவ்வாதுமலையில் புதிய கற்காலத்தைச் சார்ந்த சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனிதர்கள் பயன்படுத்திய ஆயுதங்கள், அதை தயாரிக்க பயன்படுத்திய பாறை சுவடுகள் உள்ளன. இம்மலையில் கீழ்சேப்பிளி என்ற இடத்தில் பெருங்கற்கால நினைவுச்சின்னங்கள் பல உள்ளன். இவை தவிர தா. மோட்டுரில் மனித உருவொத்த சிலை (Anthropomorphic statue), பெருங்கற்காகல சின்னங்களும் உள்ளன.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தொல்லியல் இடங்கள், ஆய்வுகள், நிழற்படங்கள், கட்டுரைகள் பற்றி இப்பிரிவில் விரிவாக இடம் பெறும்.
Comments
Post a Comment