கல்வெட்டுகள்

கல்வெட்டுகள்
கல்வெட்டுத்தகவல்கள் காலத்தால் அழிக்கமுடியாத சாட்சியாக விளங்குகின்றன. தமிழக வரலாற்றுக்கு பெருங்கொடை புரிவன கல்வெட்டுக்கள் ஆகும். இந்தியாவிலேயே அதிக அளவு கல்வெட்டுகள் கொண்டுள்ள மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது.  கி.மு. 5 ஆம் நூற்றாண்டு முதல 20 ஆம் நூற்றாண்டு வரை சுமார் 50000 கல்வெட்டுகள் தமிழகத்தில் உள்ளன. இவற்றில சுமார் 20000 கல்வெட்டுகள் மட்டுமே படித்தறியப்பட்டுள்ளன. மற்றவை அரசின் ஆவணக்காப்பகத்திலும், பல இன்னும் படியெடுக்கப்படாமலும் உள்ளன.  இக்கல்வெட்டுகளையும் படித்தறிந்தால்  தமிழக வரலாறு இன்னும் செம்மைப்படுத்தி எழுதிலாம். திருவண்ணாமலை மாவட்டத்தில் கி.மு. முதல் நூற்றாண்டு கல்வெட்டு முதல் 20 நூற்றாண்டு கல்வெட்டுகள் வரை சுமார் 1500 கல்வெட்டுகள் உள்ளன. இவற்றில் இதுவரை பதிவு செய்து வெளியிட்டவை சுமார் 500 கல்வெட்டுகள் ஆகும். மற்றவை இன்னும் வெளியிடப்படவில்லை. திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவம் இக்கல்வெட்டுகளையும் படித்து வெளியிடவும், கிராமங்களில் இது வரை கண்டுபிடிக்காத உள்ள கல்வெட்டுகளை கண்டறிந்து அதன் தகவல்களை வெளியிடவும் விழைகிறது. யாவரும் இப்பணியில் பங்கேற்கலாம், அதற்கான பகுதியே இப்பக்கமாகும்.











 

Comments

Popular posts from this blog