Posts

Showing posts from July, 2018
Image
திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவதின் இணையதளத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கிறோம்!!! அறிமுகம் மனித வாழ்விற்கு இன்றியமையாதன உணவு, உடை, இருப்பிடம் ஆகும். எனினும் மனிதனை உயிர்த்தன்மையோடு வைத்துக்கொள்வது அவன் உலகத்தோடு ஏற்படுத்திக்கொள்ளும் தொடர்பில் தான். இயல், இசை, நாடகம், சுற்றுச்சூழல், வரலாறு, கலை, இலக்கியம் போன்றவற்றில் ஏற்படும் ஆர்வம் தேடலாக மாறி சமூகமாற்றத்திற்கு வித்திடுகிறது. தொல்லியல், வரலாறு, கலை ஆர்வத்தையும் அதைப்பற்றிய தேடலையும் பொதுமக்களிடமும், இளைஞர்களிடமும், மாணவர்களிடமும் கொண்டு சேர்க்கும் முயற்சிக்காக வரலாற்று ஆர்வலர்களைக்கொண்டு 2017 ஆம் ஆண்டு மே திங்கள் 7 ஆம் திருவண்ணாமலை இவ்வமைப்பு ஏற்படுத்தப்பட்டது. இவ்வமைப்பில் வரலாற்று ஆய்வாளர்கள், அரசு அலுவலர்கள், கல்வியியலாலர்கள், ஆர்வலர்கள் என பலதரப்பட்ட ஆளுமைகள் இணைந்துள்ளார்கள்.          திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவம் என்ற இவ்வமைப்பு இம்மாவட்டத்தைப் பற்றி கலை, வரலாறு, பண்பாடு தொல்லியல்  ஆய்வுகளில் ஈடுபட்டு, அவற்றைப்பற்றிய விழிப்புணர்வையும், தேடல் ...